டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,06,11,719 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் புதியதாக 15,270 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ள நிலையில், இங்கிலாந்தில் இருந்து பரவியுள்ள புதிய வகையிலான உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது இதன் காரணமாக, பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதேவேளையில் முன்களப் பணியாளர்களுக்கு கடந்த 16ந்தேதி முதல் தடுப்பூசிகள் போடும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 15,270 பேருக்கு பேருக்கு தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,06,11,719 ஆக உயர்நதுள்ளது. தற்போதைய நிலையில் 1,89,245 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அதுபோல கடந்த 24 மணி நேரத்தில் 152 பேர் பலியான நிலையில், இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,52,906 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் நோய் தொற்று பாதிப்பில் இருந்து விடுபட்டோர் எண்ணிக்கை 20,071 பேர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,02,65,163 ஆக உயர்நதுள்ளது.