சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக தரப்பில் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை  முன்னள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அதன்படி,   பெண்களுக்கு மாதம் ரூ. 2000, பெண்களைப் போல,  ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து, இலவச ஸ்கூட்டர் நிதி உதவி உள்பட பல்வேறு அறிவிப்புகளை எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.

எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவபடத்துக்கு மரியாதை செலுத்திய அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இன்னும் 4 மாதங்களில் நடைபெற உள்ள  ர். 2026 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தலுக்கான  முதற்கட்ட வாக்குறுதிகளை அறிவித்தார்.

 அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் குலவிளக்கு என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.‘

மகளிர் நலன் குலவிளக்கு திட்டத்தின்  மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 2,000 வழங்கப்படும்

ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி,

125 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 150 நாள்களாக மாற்ற நடவடிக்கை

அம்மா இருச்சக்கர வாகனத் திட்டத்தில் 5 லட்சம் மகளிருக்கு தலா ரூ. 25,000  நிதிஉதவி,

அம்மா குடியிருப்பு திட்டத்தின்கீழ், கிராமப்புறங்களில் வீடு இல்லாதோருக்கு இடம் வாங்கி கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும்

மேலும் 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதி அறிவிக்கும் போது பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றார்.

[youtube-feed feed=1]