சென்னை: பொங்கலையொட்டி, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை உள்பட பல பகுதிகளில் நடைபெறுவது வழக்கம். அதன்படி, 2024ம் ஆண்டு நடைபெற உள்ள ஜல்லிக்கட்டி போட்டி தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது.

2024ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி,  புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சி கிராமத்தில்ஜனவரி 6 ஆம் தேதி நடைபெறுகிறது.

பொங்கல் பண்டிகை மற்றும்  அந்த பகுதியில் உள்ள  அடைக்கலமாதா தேவாலய திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் உலக புகழ்பெற்ற முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்படுகளை விழா குழுவினர், ஊராட்சி மன்ற தலைவர், உள்ளுர் மக்கள் செய்துவருகிறார்கள். வாடிவாசலுக்கான முன் ஏற்பாடுகளையும், பார்வையாளர்கள் பார்ப்பதற்கான மேடை அமைக்கும் பணியையும் விழாக் குழுவினர் மும்முரமாக செய்து வருகிறார்கள்.