2023ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு, கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சியாளர்கள் கேட்டலின் கரிக்கோ, ட்ரூ வெய்ஸ்மன் ஆகிய 2 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
கோவிட்-19க்கு எதிராக mRNA வகை கொரோனா தடுப்பு மருந்து குறித்த ஆராய்ச்சிக்காக 2 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஹங்கேரியைச் சேர்ந்த கேட்டலின் கரிக்கோ மற்றும் அமெரிக்காவின் ட்ரூ வெய்ஸ்மன் ஆகிய இருவரும் இணைந்து பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட இந்த ஆராய்ச்சிக்கு பரிசளிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 10 ஆம் தேதி ஸ்டாக்ஹோமில் நடைபெறும் நிகழ்சசியில் இவர்கள் இருவருக்கும் இந்த பரிசு வழங்கப்பட உள்ளது.