அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் களமிறங்க தமிழகஅரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. திமுக கூட்டணியும், அதிமுக கூட்டணியும் தங்களது தேர்தல் பணிகைள இப்போதே தொடங்கி விட்டன. தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்களுக்குத் தேவையான என்னென்ன செய்வோம் என்பதை வாக்குறுதியாக அளித்து தேர்தல் அறிக்கை வெளியிடுவதும் வழக்கம்.இந்த நிலையில், தேர்தலின்போது மக்களுக்கு அறிவிக்கப்பட வேண்டிய நலத்திட்டங்கள் குறித்து தேர்தல் அறிக்கை தயாரிக்க திமுக தலைமை குழுவை அமைத்தது.
அதன்படி, 1) டி.ஆர். பாலு, (பொருளாளர்), 2) சுப்புலட்சுமி ஜெகதீசன் (துணைப் பொதுச்செயலாளர்), 3. ஆ.ராசா (துணைப் பொதுச்செயலாளர்), 4. அந்தியூர் ப.செல்வராஜ் (துணைப் பொதுச்செயலாளர்), 5. கனிமொழி, எம்.பி.,(தி.மு.க. மக்களவைக் குழு துணைத் தலைவர்), 6. திருச்சி சிவா, எம்.பி. (கொள்கைப் பரப்புச் செயலாளர்), 7. டி.கே.எஸ். இளங்கோவன், எம்.பி. (செய்தித் தொடர்புச் செயலாளர்), 8.பேராசிரியர் அ.ராமசாமி” ஆகியோரைக்கொண்ட 8 பேர் கொண்ட குழுவை திமுக தலைமை அமைத்தது.
இந்த குழுவினர் இன்று திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று கூறுகிறமுது.
தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது.
இன்று காலை 9 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் திமுக தேர்தல் அறிக்கையை எப்படி தயாரிக்கலாம்? என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.