2021 தேர்தலில் வெற்றிபெற்று ஹாட்ரிக் சாதனை படைப்போம்! ஓபிஎஸ்

Must read

சென்னை:

2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 3வது முறையாக வெற்றி பெற்று, ஹாட்ரிக் சாதனை படைக்கும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில்  நிதி மற்றும் வீட்டுவசதித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங் களுக்கு பதில் அளித்து பேசிய ஓபிஎஸ், உள்ளாட்சி தேர்தல், கூட்டுறவுத்தேர்தல் உள்பட  அனைத்து தேர்தல்களிலும் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான இடங்களில் அதிமுக வெற்றி பெற்று வந்துள்ளது.

அவ்வாறு பல  வெற்றிகளை குவித்த அதிமுகவிற்கு திருஷ்டியாகவே சமீபத்தில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன என்றவர், இருந்தாலும், நாங்கள் தேனி தொகுதியை விட்டுவிட வில்லை எனவும் என்றார்.

மேலும்,  அழகாக இருக்கும் குழந்தைகளுக்கு தாய்மார்கள் திருஷ்டி பொட்டு வைப்பது வழக்கம் அதுபோல, நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அமைந்து விட்டன என்றவர்,கடந்த 2011-ம் ஆண்டு  முதல், தற்போது வரை தொடர்ந்து பிரம்மாண்ட வெற்றிகளை குவித்து வரும் அதிமுகவுக்கு  மக்கள் திருஷ்டி கழித்துள்ளனர் என்றார்.

மக்களவை தேர்தல் முடிவுகளை கண்டு தாங்கள் வருததப்படவில்லை என்றவர்,  அடுத்து 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சியை பிடித்து ம் ஹாட்ரிக் சாதனையை படைக்கும்  என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

More articles

Latest article