டில்லி:

ஜ் யாத்திரைக்கு அக்டோபர் 10ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அமைச்ச்ர முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்து உள்ளார்.

தலைநகர் டெல்லியில் நேற்றுஅ டுத்த ஆண்டு ஹஜ் யாத் திரைக்கான ஏற்பாடுகள் பற்றி ஆய்வுக் கூட்டம் மத்திய அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இதில் அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர், ஆலோசனை கூட்டத்தில்  எடுக்கப்பட்ட முடிவின்படி ஹஜ் யாத்திரைக்கு அக்டோபர் 10-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்படும்.

இந்தியாவில் இருந்து அடுத்த ஆண்டு 2 லட்சம் முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை செல்வார்கள் என்றும், நாடு முழுவதும் 22 இடங் களில் இருந்து ஹஜ் பயணிகள் புறப்பட ஏற்பாடு செய் யப்படும் என்றும் கூறினார்.