2020ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்குவாரா இந்திய வம்சாவழி கமலாஹாரிஸ்…..?

கலிபோர்னியா:

சென்னையை பூர்விகமாக  கொண்ட கமலா ஹாரிஸ் என்ற பெண்மணிதான் அமெரிக்காவின் அடுத்த அதிபராக  தேர்ந்தெர்டுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து நேரடியாக பதில் தெரிவிக்க மறுத்த கமலா ஹாரிஸ் மழுப்பலான பதிலை தெரிவித்து உள்ளார். இதுகுறித்து விரைவில் முடிவெடுப்பேன் என்றும் கூறி உள்ளார்.

இந்திய வம்சாவழியை சேர்ந்தவரான கமலாஹாரிஸ்  கலிபோர்னியா மாகாண அட்டர்னி ஜெனரலாக இருந்து வந்தவர் அமெரிக்க வாழ் இந்தியரான  கமலா ஹாரிஸ். அரசியல் ஆர்வம் கொண்ட அவர்,  ஜனநாயகக் கட்சி உறுப்பினராக உள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற கலிபோர்னியா செனட் உறுப்பினர் பதவிக்கான தேர்தலிலும் களமிறங்கிய ஹாரிஸ்   தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட லோரட்டா சான்செஸ் என்பவரை சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்தார்.

இதையடுத்து, 2020-ம் ஆண்டு நடக்கவிருக்கும் அமெரிக்க தேர்தலில் டிரம்ப்புக்கு எதிராக ஜனநாயக கட்சியின் கமலா ஹாரிசை களமிறங்குவார் என தகவல்கள் வெளியாகி வருகிறது. அவருக்கு அமெரிக்கர்களிடையே செல்வாக்கு பெருகி வருகிறது. இதன் காரணமாக  தேர்தலில் போட்டியிட கமலா ஹாரிஸ்  ஆயத்த மாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜனநாயக கட்சிக்கு ஆதரவாக ஹாரிஸ் செய்யும்  சூறாவளி பிரச்சாரம் சமுக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தீவிர களப் பணிகளில் கமலா தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

தற்போதைய நிலையில், ஜனநாயக கட்சியில் அதிபர் தேர்தலில் போட்டியிட ஏற்ற வேட்பாளர்களில் கமலாஹாரிஸ்தான்  முதல் இடத்தில் இருக்கிறார். இவருக்கு ஜனநாயக  கட்சியில் இவருக்கு 70 சதவீத உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதேவேளையில் இவருக்கு எதிரான அதே கட்சியை சேர்ந்த  முதல் இந்து பெண் எம்.பி.யான துளசி கப்பார்ட்டும்களமிறங்க வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் கமலாஹாரிஸ் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

கமலா ஹாரிஸின் தாயார் சியாமளா கோபாலன்  என்பவர் தமிழகத்தை சேர்ந்தவர். இவர் பல ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருவதால் அங்கு குடியுரிமை பெற்றுள்ளார். கமலாவின் தந்தை  ஜமைக்கா நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 2020ம் ஆண்டு அதிபர் தேர்தல், America President election 2020, Indian-origin US Senator, Kamala Harris, President Donald Trump, President Election, அமெரிக்க அதிபர் தேர்தல், இந்திய வம்சாவழி பெண், கமலா ஹாரிஸ்
-=-