2017ம் ஆண்டின் எண் கணித பலன்கள்!

Must read

பொதுப்பலன்

இந்த ஆண்டு தன்பலம் தனக்கே தெரியும் என்பதுபோல ஒவ்வொருவரும் மிக உத்வேகமாக தனது பணிகளை கவனிக்க துவங்க விருப்பதால் உற்பத்தித்துறை மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் பெறும். அரசாங்கத்தின் ஆதரவு மிக அதிகமாக வந்து குவியும் மக்களுக்கு.

கால்நடைகள் அதிகரிக்கும். நில விற்பனை பெருகும். சாதாரண பதவியில் இருப்போர் தனது விடாமுயற்சியால் நம்பமுடியாத ஏற்றங்களை அடைவர். கண் சம்பந்தமான நோய்கள் பலருக்கு வரலாம். இதற்கான முன்னெச்சரிக்கை அவசியம். அதிகளவில் துன்புறுத்தி வந்த நோய்கள் அகன்றுவிடும்.

ஆச்சாரமாக நடந்து ஆண்டவன் பற்றுடையவர்கள் அதிக அளவில் ஆனந்தமான வாழ்வினை பெறுவர். பொதுப்பணிகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட பலர் அரசாங்க திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்வதில் அதிகமான உதவிகரமாக இருப்பதால் மக்கள் கூடுதல் பலன்களை பெற்று மகிழ்வர்.

குறிப்பாக உலகத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நாடுகள் வெற்றிமேல் வெற்றி பெறும். பொருளாதார ஏற்றத்தை அள்ளிக்குவிக்கும். நாட்டின் தலைவர்கள் உலக மத்தியில் போற்றப்படும் அளவிற்கு அரசின் திட்டங்களை வகுத்து செயல்படுவார். இந்த ஆண்டின் துவக்கம் 1ம் எண்ணிலும், ஞாயிறு அன்று துவங்குவதாலும், 1.1.2017-ன் கூட்டு எண் 3-ஆக வருவதாலும், எல்லா இடங்களிலும் நீதி, நேர்மை, ஒழுங்கு, கட்டுப்பாடு மிகுந்து காணப்படுவதால் தேசத்தில் விரோதத்தை ஏற்படுத்துவோர் பெரும் பின்னடைவை சந்திக்க நேரிடும். நாட்டின் பெயர் எண் 1-ஆக வரும் நாடுகளும், 3-ம் எண்ணை கொண்ட நாடுகளும் உலக மத்தியில் பெரும் செல்வாக்கை நிலை நாட்டும்.

மேலும் இந்தியாவின் பொருளாதார ஏற்றம் வானளவில் உயரும். இரும்பு, பெட்ரோலிய உற்பத்தி, டெக்ஸ்டைல்ஸ், மருந்து, மருத்துவ நிலையங்கள், கல்வி, அரசாட்சி கொடி கட்டிப் பறக்கும். மொத்தத்தில் நல்லாட்சியாளர்களின் நிலை நினைத்து பார்த்திராத அளவிற்கு உயர்ந்திடும்.   

1ம் எண்.

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கும், பெயரின் முதல் எழுத்தாக யுஇஐஇதுஇஞஇலு-ஐ பெற்றவர்களுக்கும், 1ம் எண்ணை பெயர்எண்ணாக அமைத்துக்கொண்டவர்களுக்கும் இவ்வாண்டு என்ன பலன்கள் அமைய காத்திருக்கிறது என்று விரிவாக காண்போம்.

நிரந்தரமான பல நன்மைகள் வருவதற்கான நேரம் இது. செல்வாக்கு பெருகும். சுதந்திரமாக செயல்பட்டு மகிழ்வடைவீர்கள்.

நினைத்ததைபோலவே பல வழிகளில் இருந்து வருமானம் பெருகுவதால் புதிதாக நிலம் வாங்குவீர்கள். வீடு கட்டுவீர்கள். வாகன வசதி ஏற்படும்.

வீட்டினர் எண்ணம்போல் மங்கள காரியங்கள் நடைபெற்று மட்டற்ற மகிழ்ச்சியை பெறுவர்.

திருப்திகரமான உடல்நிலை ஏற்படும். இதனால் மனமும் மகிழும். பலநாள் நோய்கள் பறந்தோடும்.

தொட்டவை எல்லாம் பொன்னாகும் தொழிலதிபர்களுக்கு. வெளிநாட்டு ஒப்பந்தங்களும் வெகுவாக வந்து வெற்றிகளை குவிக்கும்.

வியாபாரிகள் விற்பனை படுஜோர். புதிய கிளைகள் மூலம் அதிக ஆதாயம் பெறுவர். கடன்கள் அடைக்கப்படும்.

பதவி மாற்றம், பணியிட மாற்றம் நிச்சயம் அரசாங்க அலுவலர்களுக்கு. நினைத்த கடன்கள் எல்லாம் வந்து உயர்வு தரும்.

மாபெரும் பதவிகளை மிக இலகுவாக பிடித்து உயர் பதவிகளை தக்க வைப்பர் அரசியல்வாதிகள். மாற்றங்கள் நிச்சயம் மன மகிழ்வு தரும்.

கலைத்துறையினருக்கு கட்டாயம் பணம் குவியும். அடுத்தடுத்த வெற்றிகளால் நல்ல முன்னேற்றம் உண்டு.

விவசாயிகள் விரும்பியபடி உழவு கருவிகள் வாங்கி மகிழ்வர். பக்கத்து நிலங்களையும் வாங்கி பயிரிடும் நிலை ஏற்படும்.

பெண்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்திலுமே வெற்றிதான். புகுந்த வீட்டில் தங்கள் ராஜ்ஜியம் தான்.

மாணவர்.கள் மதிப்பெண்கள் அதிகம்பெற்று தனது செல்வாக்கை நிலை நிறுத்திக்கொள்வர்.   

2ம் எண்.

2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கும், பெயரின் முதல் எழுத்தாக சுஇ முஇ டீ-ஐ பெற்றவர்களுக்கும், பெயர் எண் 2ஆக அமைந்தவர்களுக்கு வரும் ஆண்டு, அடுத்தவரிடம் எச்சரிக்கையாக பேசுதல், கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. 

தங்களின் கடின முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். ஆனாலும் தொடர் முயற்சி அவசியம்.  

மங்கள காரியங்களில் சற்று இழுபறி இருந்தாலும் முடிவில் சில மாற்றங்கள் மூலம் நினைத்தபடி நடக்கும்.

மனதிடம் அவசியம். பெரியவர்களின் வார்த்தைகளை மதிப்பது நலம். கட்டுப்பாடுடன் கூடிய உணவு அவசியம். அகால நேரங்களில் உணவு உண்பதை தவிர்க்கவும்.

தொழிலாளர் பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். இருப்பினும் தங்களின் இனிய வார்த்தைக்கு கட்டுப்படுவர். புதிய ஒப்பந்தங்களில் உஷார் தொழில் அதிபர்களே.

கற்பனைகளை தாறுமாறாக செய்வதால் கடன்கள் அதிகரிக்கலாம். அரசாங்க திட்டங்களை மதிப்பது நல்லது வியாபாரிகள்.

அதிகாரிகளிடம் அதிக நெருக்கம் வேண்டாம். உரிய பணிகளை சரியாக செய்து பெயர் பெறுவதே சிறப்பாகும் பணியாளர்களுக்கு.  

தங்களுடைய “டைமண்ட்” வாய்ஸை வெளிப்பாடு செய்து எக்கு தப்பாக மாட்டிக்கொள்ள நோpடும் அரசியல்வாதிகளே உஷார்.

வெளிநாட்டுக்கு செல்லும் கலைஞா;கள் ஒப்பந்தம் எதுவோ அதை மீறாமல் செயல்படவும். இல்லையேல் நாடு திரும்புவதில் சிரமங்களை ஏற்படுத்துவர் சிலர்.

உழவ கருவிகள் பழுது, தண்ணீர் பற்றாக்குறை, கால்நடைகளால் செலவு என விவசாயிகள் புலம்ப நேரிடும்.

பெண்களின் புகழுக்கு கலங்கம் வரலாம். கணவருடன் இணக்கமான போக்கே மகிழ்விற்கு வழிகாட்டும்.

மறதி அதிகரிக்கும். கவனக்குறைவு, ஆசிரியர்களிடம் நற்பெயர் குறையும் நிலை ஏற்படலாம். மாணவர்களே உஷார்.

3ம் எண்.

3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கும், பெயரின் முதல் எழுத்தாக ஊஇ புஇ டுஇ ளு-ஐ பெற்றவர்களுக்கும், பெயர் எண் 3 என அமைந்தவர்களும் வரும் ஆண்டு உயர்வுகளை உடனடியாக பெற வாய்ப்புள்ளது. பிரபலமானவர் களின் நட்பு அதிகமான ஆதாயத்தை தேடித்தரும்.

எடுத்த முயற்சிகளில் எல்லாம் பணம். நண்பர்களால் உதவி, வெளிநாட்டு பண வருகை என பொருளாதாரம் உயர்ந்து நிற்கும்.

தாய் தந்தையர் ஒப்புதலுடன் நினைத்ததுபோல் நல்வாழ்க்கை அமைந்திடும் இளசுகளுக்கு.

ஒவ்வாமை நோயிலிருந்து விடுபடுவர். டயாபெடிக் (இனிப்பு நீர்) வியாதிகளும் விடைபெற்று ஒடும். இதனால் மகிழ்வு உண்டு.

நண்பர்களால் புதிய ஒப்பந்தங்கள் ஏற்பட்டு, வெகுவான பணவரவிற்கு வழிகாட்டும். திடீர் பண வருகையும் மகிழ்வினை தரும்.

நகைக்கடை, இரும்பு, மருந்து, சைவ உணவகங்கள் மூலம் அதிக ஆதாயம் பெறலாம் வியாபாரிகள்.

கேட்ட கடன் தொகைகள் வரப்பெற்று வாழ்வின் தரத்தை உயர்த்திக் கொள்வர் பணியில் இருப்பவர்கள்.

திடீரென ஏற்படும் அரசியல் மாற்றங்கள் பெருமைக்குரிய பதவிகளை தந்து அலங்கரிக்கும் அரசியல்வாதிகளை.

புதுப்புது ஒப்பந்தங்களால் புகழும் பணமும் அதிகமாக வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தும் கலைஞர்களுக்கு.

கடன்கள் எல்லாம் கழிந்து வாழ்வின் தரத்தை வெகுவாக பெறுவதுடன் விளைச்சலையும் அதிகம் பெறுவர் விவசாயிகள்.

புகுந்த வீட்டில் பெரியவர்களால் புகழ் பெறுவதுடன் கணவரின் கனிவும் பெற்று மகிழ்ச்சியில் திளைப்பர் மகளிர்.

யதார்த்தமான உழைப்பில் மிக அதிகமான மதிப்பெண்களை குவித்து அனைவரிடமும் மதிப்பு பெறுவர் மாணவர்கள்.

4ம் எண்.

4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கும், பெயரின் முதல் எழுத்தாக னுஇ வுஇ ஆ-ஐ பெற்றவர்களுக்கும், பெயர்எண் 4 என அமைந்தவர்களுக்கு இந்த ஆண்டு, அவ்வப்போது சிறு சிறு பிரச்சனைகள் வந்தாலும், சுமூகமாகவே முடியும்.

செலவுகளை திட்டமிட்டு செய்ய தவறினால் நாளாபக்கமும் நற்பெயர் கெடும். கவனம்.

மனதில் நினைத்ததுபோல் காதலில் வெற்றிபெற்றாலும், பெற்றோர்களால் தொடர் அவதிக்கு உள்ளாகலாம் இளைஞர்கள். 

நீர் சம்பந்தமானதும், மூட்டு வலியும், வயிறு பிரச்சனைகளும் அவ்வப்போது உபாதைகளை ஏற்படுத்தலாம். கவனம்.

குறிப்பாக பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் சட்ட சிக்கல்களை ஏற்படுத்திக்கொள்ளாமல் இருக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

நண்பர்களை நம்பி ஏமாந்து போகும் வாய்ப்பும், அரசாங்கத்தில் கேட்ட உதவிகள் கிடைப்பதும் என நன்மைகளையும் மாறுதலான பலன்களையும் பெறுவர் வியாபாரிகள்.

எதிர்பாராத பதவி உயர்வு நிறைவை தரும். கார், வீடு போன்றவை பெற கடன் தொகைகளும் கிடைத்து மகிழ்வர் பணியாளர்கள்.

அரசியல் பதவிகள் தேடி வரலாம். கூடவே இருப்பவர்களால் ஆபத்துக்களும் வரலாம். உஷார்; அரசியல்வாதிகளே.

வெளிநாடுகளுக்குச் சென்று தங்களின் திறமைகளை மேம்படச் செய்து வெற்றி பெற்றாலும் மனதில் சஞ்சலம் இருக்கும் கலைஞர்களுக்கு.

ஏற்றமும் இறக்கமும் உண்டு. விவசாயிகள் கடன் பெற கால்கடுக்க அலைய நேரிடும். கால்நடைகளால் நன்மை உண்டு.

குடும்ப சூழ்நிலையில் ஏதேனும் குதர்க்கங்களை ஏற்படுத்த சுற்றமும் நட்பும் அதன் பணிகளை செவ்வனே செய்யலாம். பெண்களே உஷார்.

குறைவில்லா கூடுதல் உழைப்பு அதிக மதிப்பெண்களை பெற்றுத் தரலாம் மாணவர்களுக்கு.

5ம் எண்.

5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கும், பெயரின் முதல் எழுத்தாக நுஇ ர்இ Nஇ ஓ-ஐ பெற்றவர்களுக்கும், பெயர்எண்ணாக 5-ஐ பெற்றவர்களுக்கும் வரும் வருடம் வெகுவான பலன்களை அள்ளித்தரும். எதிலும் முதன்மையாக செயல்படுவீர்கள்.

தங்களின் அயராத உழைப்பினால் குறையாத செல்வம் குபுகுபுவென வந்து சேரும் நேரம் இது. கடன் தொல்லை இனி இல்லை.

சொந்த பந்தங்கள் சுபகாரியங்களை மகிழ்வுடன் நடத்த மனமாற உதவிடுவர், மகிழ்ச்சியும் நிலைத்திடும்.

உடல் நலம்பெற்று உற்சாகமுடன் செயல்படும். துணைவியார்; குழந்தைகளும் குதூகலத்துடன் செயல்படுவர்

ஏற்றுமதியாளர்களும், இரும்பு உற்பத்தியாளர்களும் கட்டுமான நிறுவனங்களும் உயர்விற்குமேல் உயர்வினை பெறுவர்.

வியாபாரிகள் திட்டமிடுதல் மூலம் அதிக ஆதாயத்திற்கு வழி பெறுவதுடன், புதிய வாகனம், புதிய வீடு வாங்கி மகிழ்வர்.

என்னவெல்லாம் வேண்டுமென எதிர்பார்த்தார்களோ அவை எல்லாம் கிடைப்பதுடன் கவுரவமும் கிடைக்கப்பெறுவர் பணியாளர்கள்.

தலைமையிடம் நற்பெயர் உண்டு. விரும்பிய பதவியும் உண்டு. ஆதாயத்திற்கு அரசாங்க ஒப்பந்தங்களும் உண்டு அரசியல்வாதிகளுக்கு.

உள்நாடு, வெளிநாடு என படு சுறுசுறுப்பாக இயங்கி வருமானத்தை அள்ளிக் குவிப்பபர் கலைத்துறையினர்.

தண்ணீர் வசதி பெறுவர் உழவு கருவிகள் வாங்குவர். வங்கிகள் கடன் தொகைகளை வாரி வழங்கும் விவசாயிகளுக்கு.

எல்லா வழிகளிலும் நீங்கள் போட்ட திட்டம்தான் வீட்டில் விதிகளாக அறிவிக்கப்படும் பெண்களே. இதனால் உங்கள் கையே ஓங்கிடும்.

அன்றாட பணிகளை திட்டமிட்டு செயலுக்கு கொண்டு வருவதால் வெற்றி என்ற சொல்லுக்கு மாறுதலே இல்லை மாணவர்களுக்கு.  

 6ம் எண்.

6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கும், பெயரின் முதல் எழுத்தாக ருஇ ஏஇ று-ஐ பெற்றவர்களுக்கும், பெயர்எண் 6 உள்ளவர்களுக்கும், இந்த வருடம், எதிர்;பார்;க்கும் எந்த விசயமும் தங்களுக்கு சாதகமாகவே முடியும். 

 எடுத்துக்கொண்ட விசயங்களில் எல்லாம் பணம் வரும் நேரமாக உள்ளது. கடன்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்.

எதிர்பாராத சொந்தங்கள் மூலம் மகன், மகளுக்கு மனம் நிறைந்த மங்கள காரியங்கள் நடைபெறும்.

உடல்நிலையில் எந்த நேரமும் சுறுசுறுப்புத்தான். இதனால் வீட்டிலிருப்போரும் நிம்மதி பெறுவர்.

அரசாங்கத்திடம் எதிர்பார்த்து காத்திருந்த கடன் தொகைகள், புதிய நிலம், வாகனம், தொழிலுக்கேற்ற சாpயான பங்குதாரர்கள் எல்லாமும் உண்டு தொழிலதிபர்களுக்கு.

சிறு வியாபாரிகள் கூட பெரியளவில் விற்பனை செய்து பணத்தை அள்ளிக் குவிப்பர் உணவகங்கள் உயர்வை தரும்.

பணியாளர்கள் நினைத்தது போல் பதவி உயர்வு, பணிமாற்றம், விரும்பிய கடன் தொகைகள் கிடைக்கப்பெற்று உயர்வடைவர்.

அசாதாரணமான பதவிகளை எளிதில் அடைந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆற்றுவர் அரசியல்வாதிகள்.

எதிர்பாராத வெளிநாட்டு ஒப்பந்தங்கள், பரிசுகள், பாராட்டுக்கள் எல்லாமும் கிடைத்து நல்ல முன்னேற்றம் பெறுவர் கலைஞர்கள்.

அதிக ஆதாயம் தரும் பயிர்களை உற்பத்தி செய்து, வெகுவான லாபம் பெறுவதுடன், நினைத்த நிலங்களையும் வாங்கி மகிழ்வர் விவசாயிகள்.

பெண்களின் மனம்போல் மாப்பிள்ளை கிடைப்பதுடன், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு அக்குறையும் தீர்க்கப்படும்.

வெளியுலகில் தங்கள் வெற்றிகளை பற்றி பிறர் பேசுவதை பார்த்து எண்ணத்தில் எழுச்சியடைவர் மாணவர்கள்.  

7ம் எண்.

7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கும், பெயரின் முதல் எழுத்தாக ழுஇ ணு-ஐ பெற்றவர்களுக்கும், பெயர்எண்ணை 7ல் பெற்றவர்களுக்கும், இந்த ஆண்டு, நீண்டகாலமாக தடைபட்ட திட்டங்கள் நிறைவேற்றம் பெறும். வெளிநாட்டு தொடா;புகள் மகிழ்வாக அமைந்திடும்.

தங்களின் அனுகுமுறையாலும் அயராத உழைப்பினாலும் தேவைக்கேற்ப பண வரவுகளை பெற்று மகிழ்வர்.

சொந்தத்தில் வரன் கிடைக்கப்பெற்று திருமணத்தை திருப்தியுடன் நடத்தி மகிழ்வர். பெற்றோர்கள்.

குடும்ப அங்கத்தினர்கள் நலன் நல்ல நிலையில் இருப்பதுடன், தங்களின் மன வியாதிகளும் போக்கப்படும்.

தொழில் அதிபர்கள் அதிக முயற்சிகள் எடுக்க நேரிடும். தொழிலாளர் பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். உஷார்.

விற்பனை சரியில்லை என பிறரிடம் புலம்புவதை நிறுத்திவிட்டு அதிக முயற்சிகளை மேற்கொண்டால் வருமானத்தை பெருக்கலாம் வியாபாரிகள்.

அதிகாரிகளிடம் எவ்வளவு விசுவாசமாக இருந்தாலும், அவர்.களின் ஆதரவு சற்று குறைவுதான். இருப்பினும் தங்களின் அன்றாடப் பணியில் குறைவில்லாமல் செய்து முடிப்பது நல்லது பணியாளர்களே. 

மக்கள் செல்வாக்கை குறைக்கும் செயல்களில் ஈடுபடாமல் கவனத்துடன் செயல்பட்டால், தலைமை நல்ல பலனை தரலாம் அரசியல்வாதிகளுக்கு.

லாபமிருக்காது என எண்ணி, வந்த வாய்ப்புகளை நழுவவிட்டு பின்னடைவை ஏற்படுத்திக்கொள்வர். கலைஞர்கள்.

விவசாயிகள் கடும் மன இறுக்கத்தில் இருப்பர். மழையை நம்புவதைவிட உழைப்பை கூடுதலாக்கினால் வருமானம் அதிகாpக்கும்.

கணவரிடம் ஒத்துப்போகாத தன்மையால், சிலர் அதிக நாட்கள் சொந்த வீடுகளுக்கு செல்ல நேரிடும். எச்சரிக்கை பெண்களே.

அயராத உழைப்பை தந்து, உயராது விடமாட்டேன் என்று உறுதியுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம் மாணவர்களே.     

 8ம் எண்.

8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கும், பெயரின் முதல் எழுத்தாக குஇP-ஐ பெற்றவர்களுக்கும், பெயர்எண்ணாக 8 அமைந்தவர்களுக்கும் இந்த ஆண்டு பொறுமையுடன் நிதானமும் மிக அவசியம். எந்த ஒரு செயலிலும் சிந்தித்து இறங்குவது நல்லது.

எப்பொழுதுமே பிறருக்காக வாழும் நீங்கள் உங்களுக்காகவும், உழைக்க வேண்டிய நேரம் இது. பலர் உங்களுடன் நட்பை வளர்த்துக்கொள்ள விரும்பினாலும் நீங்கள் தவிர்ப்பதை நிறுத்துங்கள்.

செலவுகள் அதிகமாகலாம். இருப்புகள் குறைந்தாலும் பலர் உதவ முன் வருவர். ஏற்றுக்கொள்ளுங்கள்.

பொறுமையாக செயல்பட்டு குழந்தைகளின் திருமண காரியங்களை நடத்திக் கொள்வது நல்லது பெரியோர்களே. இந்த விசயத்தில் கவுரவம் பார்;க்காதீர்கள். 

அகால உணவுகளை தவிர்ப்பது நல்லது. வாயு சம்பந்மான பொருட்களால் கடும் அவதிக்குள்ளாக நேரிடும். உஷார்.

புதிதாக வந்த நட்புகளை பெரிதாக நினைத்து, ஏற்கனவே உள்ளவர்களை உதாசீனப்படுத்தினால் ஏதேனும் சட்ட சிக்கலில் மாட்டிக்கொள்ள நோpடும். கவனம் தொழில் அதிபர்களே.

கொடுக்கல் வாங்கலில் கடும் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும். பண விசயங்களில் மிக எச்சாpக்கையுடன் நடந்து நற்பெயரை காப்பாற்றிக் கொள்வது நல்லது வியாபாரிகள்.

அதிகாரிகளை அடக்க நினைத்து கடும் சிக்கல்களை ஏற்படுத்தி, சக ஊழியர்கள் மத்தியில் அவமானப்பட நேரிடும். மரியாதை மிக அவசியம் பணியாளர்களே.

தலைமையை வேண்டாத இடத்தில் விமா;சித்து, கையும் களவுமாக விரும்பாதவர்.களால் “வாட்ஸ்அப்பில்” வறுத்தெடுக்கப்படலாம் அரசியல்வாதிகளே. கடும் எச்சாpக்கை.

பிறரால் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாவதுடன் பண விரையமும் ஏற்படும். கவனம் கலைஞர்களே.

விவசாயிகள் விருப்பங்கள் அரசால் நிறைவேற்றப்பட்டாலும் தகுந்த வாய்ப்பை நழுவ விடும் நிலை ஏற்படும். விழிப்புடன் செயல்படுவது நல்லது.

பெண்கள் பிறந்தவீட்டு பெருமை பேசுவதைவிட, புகுந்த வீட்டில் தங்களின் நற்பணிகள் மூலம் உயர்வு பெறுவது நல்லது.

சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு, உத்வேகத்துடன் செயல்பட்டு வெற்றி பெற முயலுங்கள் மாணவர்களே.   

9ம் எண்.

9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கும், பெயர்எண் 9-ஐ பெற்றவர்களும்; இந்த ஆண்டு பிறரிடம் கவமான பேசுவது நல்லது. வம்பு வழக்குகளில் சிக்கும் நிலை ஏற்படும்.

தங்களின் நியாயமான கோபம் எங்கும் ஏற்றுக்கொள்ளப்படாது. பொறுமை அவசியம்.

கட்டுக்கு மீறிய செலவுகளால் கடன் பெறும் நிலை ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்கும் வல்லமை உங்களுக்கு நிச்சயம் உண்டு.

திருமண காரியங்கள் தடையின்றி நடந்தாலும், முக்கிய நேரத்தில் தங்களது பேச்சாற்றலால் பெரும் பிரச்சனைகள் ஏற்படலாம். கட்டுக்குள் இருங்கள்.

உடல்நிலையில் உஷ்ணம் அதிகாpக்கும். வாயு பிரச்சனை ஏற்படலாம். உணவு கட்டுப்பாடு அவசியம்.

துவங்கிய பல தொழில்கள் தொடர்ந்து முன்னேற்றம் காணும். தொழிலாளர்களிடம் அன்பான அனுகுமுறை மிக அவசியம். கவனம் தொழில் அதிபர்களே.

வாடிக்கையாளர்களை இன்முகத்துடன் வரவேற்று உபசரியுங்கள். குறிப்பாக இரும்பு, மருந்து, உணவகங்கள் மூலம் அதிக ஆதாயம் உண்டு வியாபாரிகளுக்கு.

பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம், கேட்ட கடன் தொகை எல்லாம் வரும். இருப்பினும் மேலதிகாரிகளுடன் மோதல் போக்கு நல்லதல்ல பணியாளர்களே.

அரசியல்வாதிகளுக்கு விரும்பிய தலைமை பதவிகள் கிடைக்கும். அதே சமயம் கூடவே இருந்தவர்களின் குழிபறிப்பு வேலைகளும் நடக்கலாம். கவனம்.

ஏதேனும் புதிய ஒப்பந்தங்கள் வரவிற்கு வழிகாட்டும். பெண்களால் பிரச்சனைகள் எழலாம். கவனம் கலைஞர்களே.

பயிர் விளைச்சல் அமோகமாக இருந்தாலும், அவ்வப்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்படலாம். வியுகமாக செயல்படுவது விவசாயிகளுக்கு நல்லது.

பெண்கள் நினைத்ததுபோல் நல்வாழ்க்கை வாழ்ந்தாலும், பெரியோர்;களை மதிக்க கற்றுக்கொள்வது மிக அவசியம் என்பதை உணரவும்.

மாணவர்கள் மதிப்பெண்களை அள்ளிக்குவித்தாலும், ஆசிரியா;களிடம் நன்மதிப்பை பெற இயலாது. விளையாட்டின் மூலம் விரிவான புகழ் பெறுவர்.   

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article