மத்திய பட்ஜெட் 2017: 1 கோடி பேருக்கு வீடு!

Must read

 டில்லி:

வீடில்லாத ஒரு கோடி பேருக்கு வீடுகள் கட்டித்தரப்படும் என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

2017-18-ம் ஆண்டிற்கான மத்திய பொது பட்ஜெட் மற்றும் ரயில்வே பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது,

ஊரக, வேளாண்மை வளர்ச்சிக்கு ரூ.1.87 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.

வீடு இல்லாத ஒரு கோடி பேருக்கு 2019-ம் ஆண்டிற்குள் வீடுகள் கட்டித் தரப்படும்.

மேலும் ஊரக வேலை திட்டத்திற்கு ரூ.38,500 கோடியிலிருந்து, ரூ.48,000 கோடி நிதி அதிகரித்து ஒதுக்கப்படும்.

மேலும் உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வினை இனி C.B.S.E நடத்தாது. அதற்கென புது அமைப்பு உருவாக்கப்படும்.

ஜார்கண்ட் மற்றும் குஜராத் மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்.

தாழ்த்தப்பட்டோர் நலத் திட்டத்திற்கு ரூ.52,000 கோடி நிதி ஒதுக்கப்படும்.

மேலும் மூத்த குடிமக்களின் முதலீட்டிற்கு 8 சதவீதம் வட்டி உத்திரவாதமாக வழங்கப்படும்.

முதுநிலை மருத்துவக் கல்வி இடங்கள் 5 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.

வளர்ச்சியை நோக்கமாக கொண்டு 10 தலைப்புகளில் பட்ஜெட் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article