சென்னை:

டந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில்  காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முருகுமாறனிடம் தோல்வி அடைந்தார்.

இதை எதிர்த்து, சென்னை உயர்நீதி மன்றத்தில் திருமாவளவன் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதி மன்றம், அதிமுக வேட்பாளர் முருகுமாறனின் வெற்றி செல்லும் என்று உத்தரவிட்டு உள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு காட்டுமன்னார்கோவில் தொகுரியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தா. ர் இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முருகுமாறன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின்போது தபால் ஓட்டுக்களை எண்ணப்படவில்லை என்றும்,  102 தபால் வாக்குகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் .

இந்த மனு மீதான விசாரணை கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது இந்த தீர்ப்பில் திருமாவளவன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும், திருமாவளவன் கூறிய குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கபடவில்லை என்று கூறிய நீதிமன்றம் காட்டுமன்னார்கோவிலில் அதிமுக வேட்பாளர் முருகுமாறன் வெற்றி பெற்றது செல்லும் என்று தெரிவித்து உள்ளது.

திருமாவளவன் தற்போது சிதம்பரம் தொகுதியாக எம்.பி.யாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.