விருச்சக ராசி

viduchigam

இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு 10-ஆம் இடத்தில் குரு, சந்திரன் இணைந்து, “கெஜகேசரி யோகம்” அமைந்ததால், மனமகிழ்ச்சி ஏற்படும். தடைகள் நீங்கும். பொன் – பொருள் சேரும். குடும்பத்தில் சுபகாரியம், திருமணம் நடைபெறும். தனஸ்தானமான இரண்டாம் இடத்தில், சூரியன் உள்ளார். இதனால், செலவுகள் அதிகம் ஏற்படும். உடல்நலனில் கவனம் தேவை. விரயஸ்தானத்தில் செவ்வாய் அமைந்ததால், முன் கோபத்தை தரும்.

பஞ்சமஸ்தானத்தில் கேது உள்ளார். அயல்நாட்டுக்கு செல்லும் வாய்ப்பு வரும். தொழில்துறை வாய்ப்புகளும், உத்தியோகமும் அயல் நாட்டில் அமையலாம். உங்கள் இராசிக்கு லாபஸ்தானமான 11-ஆம் இடத்தில் இராகு இருப்பதால், அரசாங்க ஆதரவு கிடைக்கும்.

இதுநாள் வரை இருந்த கடன் தொல்லை நீங்கும். சகோதர வர்க்கத்தால் சற்று மனக்கசப்பு வரலாம். ஆகவே சகோதர-சகோதரிகளிடம் பொறுமை தேவை. முருகன் அருளால் முன்னேற்றம் உண்டு யோகமான ஆண்டாக அமையும்.

உங்கள் இராசிக்கான பரிகாரம் : முருகப்பெருமானை வணங்குங்கள். செவ்வாய்க்கிழமையில் கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்யுங்கள். முருகப்பெருமானின் அருளால் முன்னேற்றம் கிடைக்கும்.

ஜோதிடமாமணி லயன் கே. விஷ்வேரன்