2016 புத்தாண்டு பலன்: கும்ப ராசி அன்பர்களுக்கு

challaram_kumbam_13084

இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு சப்தமதில் குரு, சந்திரன் இணைந்து, கெஜகேசரி யோகத்தை ஏற்படுத்தி தருவதால், தொட்டது துலங்கும். மண்ணும் பொன்னாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கான காரண காரியங்கள் உருவாகும். தனஸ்தானத்தில் உள்ள கேது பகவான், விரயங்களை அதிகரிப்பார். அஷ்டமத்தில் உள்ள இராகு விரோதத்தை தேடி தருவார். ஆகவே, எதிலும் கவனமாக இருக்க வேண்டும்.

பாக்கியஸ்தானத்தில் செவ்வாய் அமைந்த காரணத்தால், வீடு, மனை வாங்கும் வசதி கிடைக்கும். லாபஸ்தானத்தில் உள்ள சூரியன், கல்வி, தொழில்துறை, உத்தியோகம் இவற்றில் நன்மை ஏற்படுத்தும். விரயஸ்தான்த்தில் உள்ள புதன், உறவினர் வருகையால் சற்று செலவுகளை அதிகரிப்பார்.

உடல் நலனில் கவனம் தேவை. தாய்மாமன் விஷயத்தில் பொறுமை தேவை. தேவை இல்லாமல் குழப்பம் ஏற்படுத்தும். ஜீவனஸ்தானத்தில் சனி, சுக்கிரன் இருப்பதால் நன்மைகளும் தேடி வரும். ஸ்ரீதுர்கை அம்மனின் அருளால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

உங்கள் இராசிக்கான பரிகாரம் : புதன்கிழமை தோறும் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று உங்களால் முடிந்தளவு நெய் தானம் செய்யுங்கள். திருக்கோயிலில் உள்ள விளக்குகள் நெய் தீப ஒளியில் மின்னட்டும். உங்கள் பொருளாதார வளர்ச்சியும் இதனால் அதிகரிக்கும். தோஷங்கள் விலகி வெற்றி கிட்டும்.

ஜோதிடமாமணி லயன் கே. விஷ்வேரன்