லண்டன்:

2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் ‘ஹேக்’ (கைப்பற்றப்பட்டு) செய்யப்பட்டு, பெரும் மோசடி நடைபெற்றுள்ளதாகவும், இதை அறிந்த பாஜக தலைவர் கோபிநாத் முண்முண்டே கொல்லப்பட்டதாகவும், அமெரிக்க சைபர் குற்றங்களை கண்டுபிடிக்கும் நிபுணர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.


இது குறித்து ஸ்குரோல்.இன் இணையம் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

கடந்த 2009 முதல் 2014 வரை எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றியவர் சையத் சுஜா.
இவர் தற்போது அமெரிக்காவில் சைபர் குற்றங்களை கண்டுபிடிக்கும் நிபுணராக இருக்கிறார்.

லண்டன் வழியே செய்தியாளர்களிடம் வீடியோ கான்ப்ரன்ஸிங்கில் பேசிய அவர், 2014 நடந்த மக்களவைத் தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டு பெரும் மோசடி நடந்துள்ளது.
வாக்குப் பதிவு இயந்திரத்தை வடிவமைத்த குழுவில் நானும் பணியாற்றினேன். இந்த மோசடி குறித்து தெரிந்ததாலேயே பாஜக தலைவர் கோபிநாத் முண்டேவும், பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இந்த தேர்தலில் பாஜக 282 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்தது.
எலக்ட்ரானிக் வாக்குப் பதிவு இயந்திரங்கள் ‘ஹேக்’ செய்யப்பட்டதுதான் இதற்கு காரணம்.

சமிக்ஞைகளை வாக்குப் பதிவு இயந்திரங்கள் உமிழும் என்றுதான் நாங்கள் நினைத்தோம். ஆனால், வாக்குப் பதிவு இயந்திரங்களை ஹேக் செய்துவிட்டு,பண்பபை மாற்றி மூலம் ராணுவத்தில் பயன்படுத்தும் அலைவரிசைக்கு மாற்றிவிட்டனர்.

2014-ம் ஆண்டு ஐதராபாத்தில் பாஜக தலைவர்களை சந்தித்து வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாற்றியமைக்கப்படுவது குறித்து எங்கள் குழுவினர் கேள்வி எழுப்பினோம்.
அப்போது எங்களை நோக்கி சுட்டார்கள். அதில் நான் காயத்துடன் தப்பினேன். சக ஊழியர்கள் சிலர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, இந்த பிரச்சினையை மறைக்க ஐதராபாத்தில் மதக் கலவரத்தையும் அவர்கள் உருவாக்கினர். இதன்பின்னர் இந்தியாவிலிருந்து தப்பியோடி அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தேன்.
வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்படுவதை தெரிந்து கொண்டதால்தான், பாஜக தலைவர் கோபிநாத் முண்டே கொல்லப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த மத்திய புலனாய்வு அதிகாரி டன்ஸில் அகமதுவையும் சுட்டுக் கொன்றனர்.

சமீபத்தில் நடந்த ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம்,சட்டீஸ்கர் தேர்தலிலும் பாஜகதான் வெற்றி பெற்றிருக்கும்.
பாஜக குழுவினர் வாக்குப் பதிவு இயந்திரங்களின் சமிக்ஞைகளை இடைமறிக்க முடியாமல் போனதால் சாத்தியப் படாமல் போனது.

இது தொடர்பாக காங்கிரஸை தொடர்பு கொண்டுள்ளோம். இந்த மோசடியை முறியடிக்க அவர்களுக்கு உதவ முடியும் என்று நினைக்கிறோம்.
வாக்குப் பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என்பதை உலகுக்கு செய்து காட்டுங்கள் என்று ஆம் ஆத்மி கட்சியும் எங்களை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த விவகாரத்தை எழுத, பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் முடிவு செய்தபோதுதான் கொல்லப்பட்டார் என்றார் சைபர் குற்றங்களை கண்டறியும் நிபுணர் சையது சுஜா.
இவ்வாறு ‘ஸ்க்ரோல்.இன்’ இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.