2013-2017வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு! செங்கோட்டையன்

Must read

சென்னை:

2013-2017வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தி அரசுப் பணி வழங்கப்படும் என்று தமிழப பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்  செங்கோட்டையன் கூறி உள்ளார்.

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் பணியிட மாற்றம் கலந்தாய்வு முடிவடைந்துள்ள நிலையில்,  மாணவர் விகிதத்தை விட, சுமார் 12 ஆயிரம் ஆசிரியர்கள் அதிகமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு, விருப்ப ஓய்வு திட்டத்தை அமல்படுத்த, பள்ளி கல்வித்துறை முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில்,  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் உபரியாக உள்ள 12ஆசிரியர்களுக்கு  விருப்ப ஒய்வு அளிப்பது குறித்து, அனைத்து சங்கங்களிடமும் கருத்து கேட்கப்பட்டு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

மேலும், அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என்று கட்டாயமில்லை என்று கூறியவர்,  கடந்த 2013-2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்பட இருப்பதாகவும், அதில் தேர்வு பெறுபவர்களுக்கு அரசு பணி வழங்கப்படும் என்று கூறினார்.

ரஜினி கூறிய அதிசயம் குறித்த கேள்விக்கு,  ரஜினி சொன்ன அற்புதம், அதிசயம் ஏற்கனவே நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில்  அதிமுகவிற்கு நடந்துள்ளது.

இவ்வாறு கூறினார்.

More articles

Latest article