சென்னை: தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கு தொடர்பாக, அமைச்சர் சேகர்பாபு மீதான வழக்கு விசாரணைக்கு தடை சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது, சென்னை கொடுங்கையூர் பகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்ட விவகாரததில், திமுக-அதிமுகவினர் இடையே தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக கொடுங்கையூர் காவல்நிலையத்தில் சேகர்பாபு உள்பட திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கை ரத்துசெய்யக்கோரியும், விசாரணைக்கு தடைவிதிக்க கோரி அமைச்சர் சேகர் பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் 2011-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நடந்த தகராறு தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதித்துள்ளது.
மேலும், வழக்கை ரத்துசெய்யக்கோரி சேகர் பாபு தொடர்ந்த மனு மீது பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வழக்கை ரத்துசெய்யக்கோரும் அமைச்சர் சேகர் பாபு மீதான விசாரணை 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.