இன்று நடக்கும் குரூப் – 4 தேர்வுக்கு 2,000 சிறப்பு பஸ்கள்

Must read

சென்னை:
மிழகம் முழுதும் இன்று நடக்க உள்ள குரூப் – 4 செல்ல 2,௦௦௦க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவிக்கையில், அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் குரூப் – 4 தேர்வை அதிகளவில் எழுதுகின்றனர். எனவே, போதிய அளவில் சிறப்பு பஸ்களை இயக்க, அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்று கூறியுள்ளனர்.

இன்று நடக்க உள்ள குரூப்-4 தேர்வு நடைபெறுகிறது. தேர்வர்கள் செல்போன், கால்குலேட்டர் கொண்டு செல்ல அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article