மோடியின் 2000 கோடி விமானம் இப்படித்தான் இருக்கும்! (படங்கள்)

Must read

boeing
மெரிக்க அதிபருக்காக தனி சிறப்பு விமானம் செயல்படுவது போல, பிரதமர் மோடிக்கும் ஸ்பெஷல் விமானம் வாங்க  பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமா பயணிக்க, அதி நவீன  சிறப்பு விமானம் பயன் படுத்தப்படுகிறது.  அந்த ஏர்பஸ் விமானத்தில், அதி நவீன வசதிகள் அனைத்தும் இருக்கிறது. அதே போல பிரதமர் மோடிக்கும்  ஸ்பெஷல்  விமானம் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் தீர்மானித்துள்ளது.
எதிரிகளின் தாக்குதல்களை முறியடிப்பதற்கான நவீன கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களுடன் புதிய விமானங்கள் இருக்கும்.
B777-300ER-Business517068A
போயிங் 777 என அழைக்கப்படும் இத்தகைய  விமானங்களில் செயற்கைகோள் தொலைதொடர்பு சாதனங்கள், அவசர கால தொலைதொடர்பு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த தொலைதொடர்பு தகவல்களை வேறு யாரும் இடைமறித்து கேட்க முடியாத அளவு நவீன பாதுகாப்பு கொண்டதாக இருக்கும்.
1
இந்த விமானம்,  ஏவுணை மற்றும் கையேறி குண்டு தாக்குதல்களை முறியடிக்கும் திறன் கொண்ட, ஆன்ட்டி மிஸைல் டிஃபென்ஸ் சிஸ்டம் கொண்டது. மேலும், ஏவுகணைகள் வருவதை முன்கூட்டியே கண்டறிந்து தடுத்து நிறுத்துவதற்கான ரேடார் மற்றும் இடைமறித்துதாக்கும்ஏவுகணைகளும் பொருத்தப்பட்டிருக்கும்.
TAM-First-Class
அவசர காலங்களில் வானிலேயே எரிபொருள் நிரப்பும் வசதியும் உண்டு.
இதனால், தரையிறங்காமல் நீண்ட தூரம் பறக்க முடியும். தற்போது பயன்பாட்டில் உள்ள போயிங் 747 விமானங்கள் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் அதிகபட்சமாக 9,800 கிமீ தூரம் வரைதான் பறக்க முடியும். ஆனால், புதிய போயிங் 777-300 விமானம் 14,594 கிமீ தூரம் வரை பறக்கும்.
thai_airways_first_class
சிறிய அறுவை சிகிச்சை அரங்கத்துடன்  கூடிய மருத்துவமனை, ஆலோசனைக்கூடம்,  கூட்ட அரங்கமும்  இந்த விமானத்தில் இருக்கும்.
 

More articles

Latest article