டில்லி:
நீதிபதிகளுக்கு 200% ஊதிய உயர்வு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு சம்பளம் உயர்த்தும் மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டத தொடர்ந்து 2016ம் ஜனவரி 1ம் தேதி முன் தேதியிட்டு 200% வரை சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. 7-வது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் இந்த சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் சம்பளம் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2.80 லட்சமாக உயரும். இதுபோல் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் சம்பளம் ரூ.90 ஆயிரத்தில் இருந்து ரூ.2.50 லட்சமாக உயரும். உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் ரூ.80 ஆயிரத்தில் இருந்து ரூ.2.25 லட்சமாக உயருகிறது. ஓய்வுபெற்ற 2 ஆயிரத்து 500 நீதிபதிகளும் பயன் பெறவுள்ளனர்.