சென்னை:
ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்களின் பயன்பாட்டிற்கு 200 புதிய கார்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதுபோன்று, ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.30.72 கோடி மதிப்பில் புதிய அரசு கட்டடங்களை 7 மாவட்டங்களில் காணொளி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். திருவாரூர், திண்டுக்கல், தருமபுரி, நீலகிரி, நாமக்கல், கன்னியாகுமரி மற்றும் திருச்சியில் ஒன்றிய அலுவலக கட்டடங்கள் திறக்கப்பட்டது. மேலும், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களும் திறக்கப்பட்டன.
Patrikai.com official YouTube Channel