திருச்சி,
ஆற்றில் மணல்கள் அளவுக்கு மீறி அள்ளப்படுவதால் அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக திருச்சி, கரூர் மாவட்டங்களில் 20 மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கட்டுமான பணிகளுக்கு கடும் மண் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மணல் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பெரும்பாலான கட்டுமாண பணிகள் முடங்கி உள்ளதாக கட்டிட பணியாளர்கள் கூறி உள்ளனர்.
விவசாயிகள் எதிர்ப்பு, கோர்ட்டு தடை காரணமாக திருச்சி, கரூர், நாமக்கல் மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட அரசு மணல் குவாரிகள் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக மூடப்பட்டுள்ளது. இதனால் போதிய மணல் லோடு கிடைக்காமல், கட்டுமான பணிகள் முடங்கியுள்ளன.
இதன் காரணமாக லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள், கட்டுமான தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் 4 அரசு மணல் குவாரிகள் மட்டும் இயங்கி வருவதால் மணல் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.