லாகோஸ்

நைஜீரியா நாட்டில் ஒரு லாரி மற்றும் பேருந்து மோதிய விபத்தில் 20 பேர் மரணம் அடைந்துள்ளனர்

நைஜீரியா நாட்டில் பல மாகாணங்கள் உள்ளன. இவற்றில் தென்மேற்கு மாகாணமாக லாகோஸ் விளங்குகிறது.  இந்நாட்டின் முக்கிய தொழில் மாவட்டங்களில் இந்த லாகோஸ் மாவட்டமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

லாகோஸ்  – படக்ரி தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்து மோவோ நகர் அருகே சென்றபோது அதன் முன்னால் சென்ற மணல் லாரியை முந்த முயன்றது.

அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து நிலைதடுமாறி லாரி மீது மோதியது.  இதனால் பேருந்தில் இருந்த 20 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பலியாகினர்.

விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.