சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.

தமிழக மாணாக்கர்களிடையே பொறியியல் படிப்பு மீதான மோகம் குறைந்து, கலை, அறிவியல் கல்லூரிகளின் மீது மோகம் அதிகரித்துள்ளது. இதனால், ஒவ்வொரு கலை அறிவியல் கல்லூரிகளிலும் ஏராளமான மாணாக்கர்கள் உயர்ப்டிப்புக்காக விண்ணப்பித்து உள்ளனர். இதன் காரணமாக, கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது.

அதன்படி  தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் மாணவர் சேர்க்கலாம் என அனுமதி வழங்கி உள்ளது. மேலும் அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில் 15%, சுயநிதி கல்லூரிகளில் 10% கூடுதலாக மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்த்து உத்தரவிட்டுள்ளது.