20/10/2020: சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்

Must read

சென்னை : தமிழகத்தில் நேற்று 3,536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,90,936 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் நேற்று 885 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக  சென்னையில் மொத்த பாதிப்பு 1,90,949 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,90,949 ஆக உள்ளது. தற்போதைய நிலையில், 12,285 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3536 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,75,128 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.


சென்னையில் கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம்:

கோடம்பாக்கம் – 1,037 பேர்
அண்ணா நகர் – 1,141 பேர்
தேனாம்பேட்டை – 889 பேர்
தண்டையார்பேட்டை – 623 பேர்
ராயபுரம் – 673 பேர்
அடையாறு- 827 பேர்
திரு.வி.க. நகர்- 889 பேர்
வளசரவாக்கம்- 717 பேர்
அம்பத்தூர்- 780 பேர்
திருவொற்றியூர்- 328 பேர்
மாதவரம்- 383 பேர்
ஆலந்தூர்- 622 பேர்
பெருங்குடி- 418 பேர்
சோழிங்கநல்லூர்- 243 பேர்
மணலியில் 165 பேர்.

 
சென்னையில் நேற்று 398 காய்ச்சல் கிளினிக்குகள்  நடத்தப்பட்டன. இதில்,  18,210 பேர் கலந்து கொண்டனர் . அவர்களில்  832 அறிகுறி நோயாளிகள் COVID-19 க்கு அடையாளம் காணப்பட்டு பரிசோதிக்கப்பட்டனர், மற்றவர்கள் சிறு வியாதிகளுக்கு மருந்துகள் வழங்கப்பட்டது.

 

More articles

Latest article