சென்னை: தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 33ஆயிரத்தை கடந்துள்ளது. வட மாநிலங்களில் தொற்று பரவல் சற்று குறையத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் தொற்று பரவல் தீவிரமாகி உள்ளது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளன.
தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை 33 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த மே 15-ந்தேதி இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 33,658 பேர் பாதிக்கப்பட்டனர். அன்று 303 பேர்தான் உயிரிழந்தனர். இன்று தினசரி கொரோனா பாதிப்பு 33,059 ஆக உள்ளது. என்றாலும் உயிரிழப்பு இதுவரை இல்லாத அளவிற்கு 364 ஆக பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் நேற்று 34,875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. ‘இதுவரை 16,99,225 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 365 பேர் மரணம் அடைந்துள்ளார். இதுவரை 18,734 பேர் உயிர் இழந்துள்ளனர். அதே வேளையில் நேற்று 23,863 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 14,26,915 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
அதிகபட்சமாக சென்னையில், நேற்று 6,297 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 4,56,496 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 91 பேர் உயிர் இழந்துள்ளார்.. இதுவரை 3,031 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 4,02,139 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் தற்போதைய நிலையில் 2,53,576 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 48,326 பேர் சென்னையில் சிகிச்சை பெறுகின்றனர்., தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.
சென்னை – மண்டலம் வாரியாக பாதிப்பு: