கோவை மாவட்டத்தில் 1,398 ரேஷன் கடைகள் உள்ளது. இதன் மூலம் பொதுமக்களுககு அரிசி, பருப்பு, உளுந்து, சர்க்கரை, சமையல் எண்ணெய், கோதுமை உள்பட பல்வேறு பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போது தேர்தல் முடிவடைந்து விட்டதால், மீண்டும் புதிய விண்ணப்பங்கள், பெயர் திருத்தம், நீக்கம் ஆகியவற்றுக்கும் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் இதுவரை 20 ஆயிரம் போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெவிவித்துள்ளனர். இன்னும் 3 மாதங்களில் புதிய ரேசன்கார்டுகள் வழங்கப்படும். புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் கார்டுதாரர்களின் முகவரி, ஆதார் எண் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்று இருக்கும்.