காவேரி வடக்கு வனவிலங்கு சரணாலயத்தில் ஓசூர் வனக்கோட்டத்தில் ஜுவாலகிரி காப்புக்காடுகள் சரக பகுதியில் 50 வருடங்களுக்கு பிறகு இரண்டு புலிகள் தென்பட்டது.
ஜூவாலகிரி காப்புக்காடுகள் சரக பகுதியில் 4 முதல் 5 வயதுள்ள மற்றும் 8 முதல் 9 வயதுள்ள இரண்டு ஆண் புலிகளின் புகைப்படங்கள் பதிவாகி உள்ளதாக ஓசூர் வன உயிரினக்காப்பாளர் மற்றும் தலைமை வன உயிரினக்காப்பாளர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
ஜுவாலகிரி காப்புக்காடுகள் சரக பகுதியில் ஜனவரி 2024- இல் பொருத்தப்பட்ட கேமரா பதிவுகள் மூலம் இந்த இரண்டு புலிகளின் புகைப்படங்கள் பதிவாகி உள்ளது.
In a significant development, two Tigers were recorded in
camera traps nearly after 50 years gap in the Reserve Forests of Jawalagiri range in the Cauvery North Wildlife Sanctuary at Hosur, Tamil Nadu.Jawalagiri range is adjacent to the recently notified Cauvery South Wildlife… pic.twitter.com/CTIQ0XV40S— Supriya Sahu IAS (@supriyasahuias) February 2, 2024
50 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு புலிகள் இந்த சரணாலயத்தில் தென்பட்டுள்ள நிலையில் வன உயிரினங்களைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கையின் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இது கருதப்படுகிறது.