சென்னை:
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, மருத்துவக் கல்லூரியில் இடம்பிடித்த விவகாரம் நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது. ஏற்கனவே ஆள்மாறாட்டம் புகார் 6 பேர் சிக்கி உள்ள நிலையில், கைது செய்யப்பட்டுள்ள பிரவீன் மற்றும் ராகுல் டில்லி, உ.பி.யில் ஆள் மாறாட்டம் செய்தது அம்பலமாகி உள்ளது.
நீட், ஆள்மாறாட்டம், மோசடி மற்றும் சதித்திட்டம் காரணமாக கேரளாவைச் சேர்ந்த எஸ்.பிரவீன் மற்றும் ரகுல் டேவிஸ் மற்றும் சென்னையைச் சேர்ந்த உதித்சூர்யா, இர்பான் போன்றோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், பிரவீன் மற்றும் ரகுல் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
கேரளாவைச் சேர்ந்தவர்களான பிரவீன் மற்றும் ராகுல் ஆகிய 2 மாணவர்களும் வெவ்வேறு தேர்வு மையத்தில் நீட் தேர்வு எழுதியதும், அவர்களும் முறைக்கேட்டில் ஈடுபட்டதாகவும் கைது செய்யப்பட்டனர்.
சென்னை அரும்பாக்கத்தில் வசித்து வரும் பிரவின் சென்னையில் ஆவடியில உள்ள செயின்ட் பீட்டர்ஸ் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன கல்லூரியில் 2019ம் ஆண்டு நீட் தேர்வு எழுதினார், அதே நேரத்தில் டெல்லியின் பிதாம்புராவில் உள்ள பால் பாரதி பப்ளிக் பள்ளியில், பிரவின் பெயரில் மற்றொருவர் தேர்வு எழுதி உள்ளார். சென்னையில் தேர்வு எழுதிய பிரவீன் 720க்கு 130 மதிப்பெண்கள் மட்டுமே (தேர்வில் தேர்ச்சி பெற 134 தேவை) பெற்று தோல்வியை சந்தித்த நிலையில், டில்லியில் அவரது பெயரில் எழுதிய போலி பிரவீன் 348 மதிப்பெண்கள் எடுத்தார்.
அதுபோல, ராகுலுக்கான நபர் உ.பி. மாநிலம் லக்னோவின் ராஜாஜிபுரத்தில் உள்ள ஸ்வர்னிம் பப்ளிக் பள்ளியில் நீட் நுழைவு எழுதி 306 பெற்று வெற்றி பெற்றார்.
இதையடுத்து நடைபெற்ற கவுன்சிலிங்கில், பிரவின் மற்றும் ராகுலுக்காக போலிகள் பங்கேற்று இடம் பிடித்துள்ளனர். அதன்படி, பிரவீனுக்கு காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஒரு இடமும், ராகுலுக்கு, குரோம்பேட்டிலுள்ள ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையிலும் இடம் கிடைத்தன.
அதையடுத்து, ஜூலை 19 ஆம் தேதி இருவரும் அந்தந்த கல்லூரிகளில் சேர்ந்தனர். கடந்த வாரம், பிரவீன் மற்றும் அவரது தந்தை ஏ கே எஸ் சரவணன், மற்றும் ரகுல் மற்றும் அவரது தந்தை சி.ஏ. டேவிட் ஆகியோர் சிபி-சிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்தே, பிரவீன், ராகுல் ஆகியோர் ஆள்மாறாட்டம் செய்தது தெரிய வந்துள்ளது.
இவர்களின் ஆள்மாறாட்டம் தொடர்பாக ரஷீத் எனப்படும் கேரள மாநில புரோக்கரை சிபிசிஐடி வலைவீசி வருகிறது.
Thanks: TOI