சென்னை

திருச்செந்தூருக்கு கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

திருச்செந்தூரில் நடைபெறும் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தாம்பரம் – திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் – சென்னை சென்ட்ரல் இடையே இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று  (6-ஆம் தேதி) இரவு தாம்பரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயிலானது செங்கல்பட்டு, விழுப்புரம் விருத்தாச்சலம், திருச்சிராப்பள்ளி,மதுரை திண்டுக்கல்,விருதுநகர், சாத்தூர் வழியாக 7 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

நாளை (7-ஆம் தேதி) இரவு திருச்செந்தூரிலிருந்து இரவு 10.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயிலானது ஆறுமுகநேரி, நசரத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல்,திருச்சிராப்பள்ளி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக 8 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.