புதுச்சேரி: தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் +2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்து உள்ளார்.

மத்தியஅரசு, சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள் பிளஸ்2 தேர்வை ரத்து செய்வதாக அறிவித்து உள்ளன. தமிழகத்திலும் கடந்த 5ந்தேதி பிளஸ்2 தேர்வு செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். முன்னதாக  தேர்வு குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினிரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதைத்தொடர்ந்தே தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், புதுச்சேரியில் பிளஸ்2 தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் ரங்கசாமி,  பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்படுவதாக  அறிவித்து உள்ளார்.