கோவை:
கோவை ஈஎஸ்ஐ மருத்துவனையில் சிசிக்சை பெற்று வந்த கடைசி 2 கொரோனா நோயாளிகளும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், திருப்பூர் மாவட்டம் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 669 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 204 ஆக அதிகரித்துளளது. கொரோனாவில் இருந்து 135 பேர் குணமடைய , இதுவரை ஆயிரத்து 959 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில்  இதுவரை 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவர்கள்  அனைவரும் கோவை ஈஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்கள் படிப்படியாக குணமாகி 112 பேர்  டிஸ்சார்ஜ் ஆன நிலையில், கடைசியாக சிகிச்சை பெற்று வந்த இடுவாய் பகுதியச்சேர்ந்த 2 பேரும் இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இதனால் அனைத்து நோயாளிகளும் குணமான நிலையில், தற்போது திருப்பூர் மாவடடம் கொரோனா இல்லாத  மாவட்டமாக மாறி உள்ளது.