கோவை: கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் 2 இஸ்லாமிய இளைஞர்களை என்ஐஏ கைது செய்துள்ளது. அதன்படி,  கோவையை சேர்ந்த சேக் இதயத்துல்லா மற்றும் சனோபர் அலி ஆகிய இருவரை கைது செய்துள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. இவர்கள் குண்டுவெடிப்பு நடத்த சதி திட்டங்கள் தீட்டியது தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில்,  அந்த காரை ஓடிடி வந்த  ஜமேஷா முபின் என்ற பயங்கரவாதி உயிரிழந்தார். அவருடன் உடந்தையாக செயல்பட்டதாக முதலில் 6 பேரும் பின்னர் விசாரணையைத் தொடர்ந்து மேலும் 3 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், உயிரிழந்த பயங்கரவாதி ஜமீஷாவுடன் பலமுறை சந்தித்து பேசிய அவரது கூட்டத்தைச் சேர்ந்த மேலும் 2 இஸ்லாமிய இளைஞர்களை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பா வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் வெடிப்பு சம்பவம்  தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.  கைது செய்யப்பட்டுள்ள இஸ்லாமிய இளைஞர்கள், தடை செய்ய பபட்ட இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, நடத்தப்பட்ட சோதனையில்,  உயிரிழந்த  ஜமேஷா முபின் (வயது 28) அவரின் வீட்டில் இருந்த 75 கிலோ வெடிமருந்துகள் மற்றும் பல்வேறு ஆவணங்களை உக்கடம் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக ஜமேஷா முபினின் உறவினர் அப்சர்கான் (28), மற்றும் முகமது அசாருதீன் (23), முகமது தல்கா (25), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (26), முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது உபா சட்டம் (சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டம்) பாய்ந்தது. இவர்கள் கோவை உள்பட பல இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்ட அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

மேலும் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து,  கைதான 6 பேரின் வீடுகள் மற்றும் சந்தேக நபர்களின் வீடுகளிலும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் செல்போன், மடிக்கணினி உள்பட சில ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அதை வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து கோவை போத்தனூரை சேர்ந்த முகமது தவுபீக் (25), பெரோஸ்கான் (28), நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த ஆட்டோ டிரைவரான உமர் பாரூக் (39) ஆகிய 3 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த 7-ந் தேதி கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், முகமது தவுபீக், பெரோஸ்கான், உமர் பாரூக் ஆகிய 3 பேரும் ஜமேஷா முபினுக்கு உதவியாக இருந்தது தெரியவந்தது.

அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் கோவை அல்அமீன் காலனியை சேர்ந்த ஷேக் இதயத்துல்லா (38), வின்சென்ட்ரோட்டை சேர்ந்த சனோபர் அலி (30) ஆகிய மேலும் 2 பேரை நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.

இவர்கள் கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா முபின் உடன் சேர்ந்த, முகமது அசாருதீன், ஷேக் இயத்துல்லா மற்றும் சனோபர் அலி ஆகியோர் பயங்கரவாத செயல்களுக்கு தயாராகி அதை செயல்படுத்த சதி செய்ததும் தெரியவந்துள்ளது.

அதுபோல,  இந்த வழக்கில் கைதான உமர் பாரூக் தலைமையில் ஜமேஷா முபின் உள்பட இதில் தொடர்புடையவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியான ஆசனூர் மற்றும் கடம்பூர் பகுதிகளில் சந்தித்து குண்டுவெடிப்பு  சதித்திட்டத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

தற்போது கைதான ஷேக் இதயத்துல்லாவிடம் இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் கொச்சி என்.ஐ.ஏ. அலுவலகத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.