சென்னை: தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்குகளை  கும்பகோணம் நீதிமன்றம் மட்டுமே விசாரித்து வந்த நிலையில், தற்போது மேலும் இரண்டு  நீதிமன்றங்களுக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டு உள்ளது.

ஆன்மிக மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள பழங்கால கோயில்களில் உள்ள பழமையான சிலைகள் திருடப்பட்டு வருவது தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.   இதை தடுக்க தமிழ்நாடு அரசு சிலை தடுப்பு பிரிவை அமைத்து, திருட்டப்பட்ட சிலைகளை மீட்டு வருகிறது. இதிலும் பல முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. தமிழகத்தில் இருந்து ஏறத்தாழ 3,000 சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன. அவற்றின் அனைத்துலக சந்தை மதிப்பு ரூ.40,000 கோடியாகும்.
கடத்தப்பட்ட சிலைகளில் சுமார் 2,900 சிலைகள் அமெரிக்க வாழ் இந்தியரான சுபாஷ் சந்திரகபூர் மற்றும் அவரது கூட்டாளிகளால் கடத்தப்பட்டுள்ளன. அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் சிலை கடத்தல்  1960ல் இருந்தே  நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆனால், முன்பெல்லாம் இதை குகண்டுகொள்ள யாருமில்லை.  கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தொடங்கப்பட்ட சிலை கடத்தல் தடுப்பு  மற்றுமி மீட்பு  குழுவுக்கு ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி பொன்மானிக்க வேல் தலைமையிலான  குழு அமைக்கப்பட்ட பிறகே, பல ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயிரக்கணக்கான சிலைகள் மீட்கப்பட்டு உள்ளது.

சிலை கடத்தல்காரர்களைத்தான் அவரால் பிடிக்கமுடியவில்லையே தவிர சிலைகளை மீட்பதில் வெற்றிபெற்றிருக்கின்றார் பொன்மாணிக்கவேல். அவரது முயற்சியால் மீட்கப்பட்ட நடராஜார் சிலை, ஆஸ்திரேலிய நாட்டு மியூசியத்தில் இருந்து மீண்டும்  கல்லிடைகுறிச்சி ஆலயம் வந்தது,  அதுபோல கடத்தப்பட்ட  மாமன்னன் ராஜ ராஜன் சிலையும் அவன் மனைவி உலகமகாதேவி சிலையும், அதை மீட்டு வந்தார் மாணிக்கவேல் இன்னும் ஏராளமான சிலைகளை அவர் மீட்டெடுத்தார் வரவேண்டிய சிலைகள் இன்னும் ஏராளம் உண்டு. அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள சிலைகளைக் கண்டுபிடித்து இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

 சிலை கடத்தல் வழக்குகளை கும்பகோணத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் மட்டுமே விசாரித்து வந்தது. இதனால்,  பழங்காலச் சிலைகள், கலைப்பொருள்கள் கடத்தல் தொடர்பான வழக்குகள் ஏராளமான தேங்கி உள்ளன. இதை தவிர்க்க சென்னை, மதுரை, கும்பகோணத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றங்கள் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம்  அனுமதி அளித்துள்ளது.