கல்பாக்கம்:

கடலூரில் ஆய்வு செய்து விட்டு சென்னைக்கு திரும்பிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் பாதுகாப்பு வாகனம் மாமல்லபுரம் அருகே சாலையை கடந்தவர்கள் மீது மோதியதில் இருவர் இறந்தனர் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடலூர் வண்டிப்பாளையத்தில் இன்று ஆய்வு செய்ய சென்றார். அப்போது அவர் துப்புரவு பணிகளையும் மேற்கொண்டார். அம்பேத்கர் நகர் கழிப்பிடங்களை ஆய்வு செய்தபோது ஒரு வீட்டில் இருந்த கீற்று மறைப்பை அகற்றி பார்த்தார். அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்த பெண் இதை கண்டு அலறினார்.

இதனால் ஊர்மக்கள் அவரை சுற்றி வளைத்தனர். பின்னர் போலீசார் அவரை பத்திரமாக மீட்டனர். இந்த பணிகளை முடித்துக் கொண்டு ஆளுநர் கடலூரில் இருந்து சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தார். கிழக்கு கடற்கரைச் சாலையில் புதுகல்பாக்கம் அருகே சிலர் சாலையை கடந்தனர்.

அப்போது அசுர வேகத்தில் வந்த ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் பாதசாரிகள் மீது மோதியது இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இறந்தவர்கள் குறித்த முழு விவரம் உடனடியாக தெரியவில்லை. காயமடைந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.