கிருஷ்ணகிரி

மிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத ஒரே மாவட்டமாக இருந்து வந்த கிருஷ்ணகிரியில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டம் பச்சை மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலமாக மாறி  உள்ளது.


தமிழகத்தில் கொரொனா பாதிப்பு நாளுக்கு வேகமாக பரவி வருகிறது. நேற்றைக்கு இன்று அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  கடந்த 24 மணி நேரத்தில் 266 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  சென்னைக்கு அடுத்த படியாக கடலூர் மாவட்டத்தில் 122 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 266 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது  இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1724 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒருவருக்கொரும் கொரோனா தொற்று உறுதியாகாமல் இருந்து வந்தது.
ஆனால், இன்று  அங்கு 2 முதியோர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சூளகிரி பகுதியைச்சேர்ந்த  அந்த 2  பெண்களும் 60வயது மேற்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இவர்களில் ஒருவர் சமீபத்தில்  உறவினர்  கல்யாண நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. மற்றொருவர் தனது இருப்பிடத்தை விட்டு வேறு  எங்கும் செல்லாதவர்.  ஆனால் சமீபத்தில் பெங்களூரில் இருந்து அவரது வீட்டுக்கு வந்த அவர் உறவினர் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனால்,  தமிழகத்திலேயே ஒரே பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டம்  தற்போது கொரோனா பாதிப்பு நார்மலாக உள்ள பகுதியான ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறி உள்ளது.
இது மாவட்ட மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்ட மாவட்ட வாரியானா கொரோனாபாதிப்பு பட்டியலில் கிருஷ்ணகிரியில் கொரோனா தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.