டில்லி:

12வது வகுப்பு பொருளியல், 10வது கணிதம் பாடங்களுக்கு மறு தேர்வு நடைபெறுவதாக  சிபிஎஸ்இ கல்வி வாரியம் நேற்று அறிவித்த நிலையில், இன்று தேர்வு தேதியை அறிவித்து உள்ளது.

அதன்படி ஏப்ரல் 24ந்தேதி 12வது வகுப்பு பொருளியல் தேர்வும், ஏப்ரல் 26ந்தேதி 10வது கணிதம்  பாடத்துக்கான மறு தேர்வு நடைபெறும்  அறிவித்து உள்ளது.

சிபிஎஸ்சி 10வது மற்றும் 12வது வகுப்புகளுக்கான  பொதுத்தேர்வுகள் நாடு முழுவதும் சமீபத்தில் நடைபெற்று முடிந்தன. இந்நிலையில், சில பாடங்களுக்கான கேள்வி தாள்கள் இணைய தளங்களில் வெளியானதாக குற்றச்சாட்டு எழும்பியது.

இது நாடு முழுவரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கேள்வித்தாள் வெளியானதாக புகார் கூறப்பட்ட அன்று சிபிஎஸ்இ கல்வி வாரியம் எந்தவித அறிவிப்பும் வெளியிடாமல், அதை மறுத்து வந்த  நிலையில், பெரும்பாலான மாணவர்கள், மேற்படிப்புகளுக்கு விண்ணபிக்க ஆயத்மாகி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று பிளஸ் பொருளியல் மற்றும் 10வது கணிதம் பாடத்துக்கு  மறு தேர்வு நடைபெறும் என்று அறிவித்து நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில், மறு தேர்வு நடைபெறும் தேதியை சிபிஎஸ்இ கல்வி வாரியம் இன்று அறிவித்து உள்ளது.