திருச்சி: மயிலாடுதுறை கோவில் வெள்ளி படிச்சட்டம் திருடு போன வழக்கில் 7 ஆண்டுகளுக்கு பிறகு 2 தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் திருடிய பட்டிசட்டத்தை ஜுவல்லரியில் விற்பனை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

மயிலாடுதுறை பகுதியில் உள்ள பிரபலமான பரிமள ரெங்கநாதர் கோவில். இந்த கோவிலில் மரத்தினால் செய்யப்பட்டு,  அதன் மேல் வெள்ளித்தகடுகளால் வேயப்பட்ட படிச்சட்டம் கடந்த  7 ஆண்டுகளுக்கு முன்பு திருடு போனது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் சுமார் 7 ஆண்டுகளுக்குபிறகு, அந்த படிச்சட்டத்தை திருடியதாக 3 தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் படிச்சட்டத்தை கழற்றி எடுத்து,அதை ஒரு ஜூவல்லரியில் விற்பனை செய்துள்ளனர்.

இதுதொடர்பாக ஸ்ரீநிவாச ரெங்கநாத பட்டர் முரளிதர தீட்சிதர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன், விற்பனை செய்யப்பட்ட படிச்சட்டமும் மீட்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். நீதிமன்றம் அவர்கள் 2 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.