இம்பால்
மீண்டும் மணிப்பூரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் மரணம் அடைந்து 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கடந்த மே மாதம் 3 ஆம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் இடையே கலவரம் வெடித்து இதனால் அங்கு கடும் வன்முறை ஏற்பட்டது. இதனால் அங்குள்ள மக்கள் மட்டுமின்றி நாடே கடும் பீதியில் ஆழ்ந்தது.
மணிப்பூரில் நடந்த வன்முறை சம்பவங்களால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி இதுவரை 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூர் மற்றும் பிஷ்னுபூர் மாவட்டங்களில் மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளன.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வன்முறை நடந்த இடங்களில் காவல்துறை மற்றும் ராணுவப் படைகள் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]