பயிர்கள் கருகின!: 2 நாட்களில் 19 விவசாயிகள் பலி!

Must read

திருச்சி:

தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியதை கண்டு மாரடைப்பு ஏற்பட்டு மேலும் ஒரு விவசாயி திருச்சியில் மரணமடைந்தார். நேற்றும் இன்றும் மட்டும் 19 விவசாயிகள் பலியாகி இருக்கிறார்கள்.

நேற்று ஒரு நாள் மட்டும், பயிர்கள் கருகியதை பார்த்து விவசாயிகள் பத்து பேர், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர்.

நாகை மாவட்டம்  நடுசேத்தியை சேர்ந்த கோகுலவாசன், மேல்சேத்தி கணபதி ஓர்குடி கிராமத்தில் கலியபெருமாள் ஆகியோரும்  மாரடைப்பால் உயிரிழந்தனர்.  கடம்பர வாழ்க்கை கிராமத்தில் பெண் விவசாயி சரோஜாவும், பயிர் கருகியதைப் பார்த்து மாரடைப்பால் பலியானார்.

கமுதி பெரிய கையகம் கிராமத்தில் காளிமுத்து, சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கருப்பையா என்ற விவசாயிகளும் பலியானார்கள்.  கோவில்பட்டியில் ஒரு விவசாயி இதே போல மாரடைப்பால் இறந்தார்.

மயிலாடுதுறை அருகே கருவாழக்கரையில் விவசாயி ராஜ்குமார், மரணமடைந்தார்.  .

நேற்று முதல் இன்று வரை தமிழகத்தில் 19 விவசாயிகள் மரணமடைந்துள்ளனர்.

 

 

More articles

Latest article