சென்னை:

ரூ. 2 கோடி ரூபாய் பழைய நோட்டு விவகார்ததில் தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் உளவுத்துறை உதவி ஆய்வாளர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சூளைமேட்டில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கிடமான காரை நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது காரில் இருந்த இருவர் இறங்கி தப்பிஓடினர்.

காரை சோதனை செய்த காவல்துறையினர் அதில் இருந்து 1.95 கோடி ரூபாய் பழைய நோட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து காரின் உரிமையாளரான வழக்கறிஞர் சிவக்குமார் கைது செய்யப்பட்டார். அவர் மீது 4  பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வழக்கறிஞர் சிவக்குமாரிடம் நடத்திய விசாரணையில் இந்த குற்றத்தில் உளவுத்துறை உதவி ஆய்வாளர் ஆல்பர்ட்டுக்கு தொடர்பிருப்பதாக தெரிய வந்தது. இதையடுத்து உளவுத்துறை உதவி ஆய்வாளர் ஆல்பர்ட் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.