சென்னை: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கடந்த 18ந்தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ள நிலையில், அரசு மற்றும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2 நாளில் மட்டும் 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிள் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களாகமூடப்பட்டுள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தனியார் பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கையை முடித்துவிட்ட நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 18ந்தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
அதன்படி கடந்த இரு நாட்களில் மட்டும் மாணவர் சேர்க்கை இரண்டரை லட்சத்தை தாண்டி உள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துஉள்ளது.
ஏற்கனவே கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடுமையான நிதிச்சிக்கலில் சிக்கியுள்ள பொதுமக்கள், அரசு பள்ளிகளை முற்றுகையிட்டு வருகின்றனர். மேலும் கல்வி கட்டணம் தள்ளுபடி மற்றும், ஆவணங்கள் இல்லாவிட்டாலும் மாணவா்களுக்கு சோக்கை, இலவசமாக பாடநூல்கள், புத்தகப்பை வழங்கப்படுகின்றன. இதனால் மாணவா் சோக்கை இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
அனைத்து பள்ளிகளிலும், மாணவர் சோக்கை நடைபெறும் இடங்களில் முகக் கவசம், கிருமிநாசினி, தனிநபா் இடைவெளி போன்ற அரசின் விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.