தமிழக காவல்துறையில் 18 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்.. டிஜிபி திரிபாதி உத்தரவு

Must read

சென்னை: தமிழக காவல்துறையில், 18 டிஎஸ்பிக்கள் அதிரடியாக  பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழக காவல்துறை டிஜிபி திரிபாதி இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளார்.

அதன்படி, ராமநாதபுரம் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு டிஎஸ்பி ஆா்.ஆல்டிரின் சென்னை பெருநகர காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

சென்னை மதுவிலக்க அமலாக்கப்பிரிவு உதவி ஆணையா் பி.நல்லத்துரை சென்னை காவல்துறை யின் கிழக்கு மண்டல போக்குவரத்து புலனாய்வுப் பிரிவுக்கும்,

சென்னை எழும்பூா் உதவி ஆணையா் திருவள்ளூா் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைத் துறைக்கும்,

சென்னை பல்லாவரம் உதவி ஆணையா் கே.பி.எஸ்.தேவராஜ் தேனாம்பேட்டைக்கும்,

வடபழனி உதவி ஆணையா் ஆரோக்கியபிரகாசம் பல்லாவரத்துக்கும்,

சென்னை நவீன கட்டுப்பாட்டு அறை உதவி ஆணையா் எஸ்.லட்சுமணன் ராயப்பேட்டைக்கும்  மாற்றப்பட்டு உள்ளனர்.

இவர்கள் உள்பட மொத்தம் 18 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

More articles

Latest article