கொல்கத்தா: பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் கைதிகள் அதிக அளவில் கர்ப்பாகி வருவதாகவும், இதன் காரணமாக 196 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், கொல்கத்தா நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

பெண் முதலமைச்சர் மம்தா ஆட்சி செய்து வரும் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள சிறைச்சாலைகளில்தான்  இந்த அவலம் அரங்கேறி உள்ளது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து பெண்கள் அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைக்குள் ஆண்கள் நுழைய தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

மேற்குவங்க மாநிலத்தில் சிறையில் பெண் கைதிகள் கர்ப்பமாகி வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, , வங்காளத்தின் சீர்திருத்த இல்லங்களில் பணிபுரியும் ஆண் ஊழியர்களை பெண்கள் சிறைக்குள்  நுழைய தடை விதிக்க வேண்டும்  கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் அமிகஸ் தபா பஞ்சா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சிவஞானம் மற்றும் நீதிபதி சுப்ரதிம் பட்டாச்சார்யா  அமர்வு இதுதொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமிகஸ் தபா பஞ்சா தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது. அதன்படி, மாநில சிறைகளை ஆய்வு செய்து அங்கு நிலவும் நிலைமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பஞ்சாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது

இதையடுத்து,  பெண் கைதிகள் கர்ப்பம் மற்றும் குழந்தை பிறப்பு  தொடர்பாக துய்வு செய்யப்பட்ட அறிக்கை  கொல்கத்தா தலைமை நீதிபதி உத்தரவுப்படி, நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டது.

அதில், அலிப்பூரில் உள்ள பெண்கள் சீர்திருத்த இல்லத்தில் 15 குழந்தைகளை , அதாவத  10 ஆண் மற்றும் 5  பெண்க குழந்தைகள் பிறந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், அங்கு அடைக்கப்பட்டுள்ள  க  “கைதிகளுடனான உரையாடல்களின் அடிப்படையில், சில கைதிகள் சீர்திருத்த இல்லத்திலேயே பிரசவித்தது தெரியவந்துள்ளது” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பல சிறைகளில், முறையான மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் இல்லை. பெண்கள் வார்டுகளில் நெரிசலை சுட்டிக்காட்டி,  வேறு இடங்களில் அடைக்கப்பட்டு உள்ளதாகவும்,  மத்திய சீர்திருத்த இல்லத்தில் 400 பெண் கைதிகள் காணப்பட்டதாகவும், கூட்ட நெரிசல் காரணமாக அலிப்பூரில் உள்ள பெண்கள் சீர்திருத்த இல்லத்தில் இருந்து 90 பேர் மாற்றப்பட்டதாகவும்  தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சமீபகாலமாக சிறைகளில், பெண் கைதிகள் அதிகளவில் கர்ப்பமாகிறார்கள். இதுவரை 196 குழந்தைகள் சிறையில் பிறந்துள்ளன. எனவே பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைக்குள் ஆண்கள் நுழைய தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த விவகாரம் மேற்கு வங்க மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெண் முதலமைச்சரான மம்தா  ஆட்சி செய்து வரும் மேற்குவங்க மாநிலத்தில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளே பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, குழந்தைகள் பெறும் அவலம் ஏற்பட்டுள்ளது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.