அரியலூர்:
ரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி ஆன நிலையில், ஆரஞ்சு மண்டலமாக இருந்து வந்த  மாவட்டம் தற்போது சிவப்பு மண்டலமாக மாறி உள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக எந்தவொரு கொரோனா பாதிப்பும் இல்லாத நிலையில்,  8 பேர் மட்டுமே கொரோனா சிகிச்சை பெற்ற வந்தனர். இதனால் ஆரஞ்சு மண்டலமாக இருந்து வந்தது. இன்னும் ஒரு வாரத்தில் முற்றிலும் கொரோனா இல்லாத பச்சை நிற மண்டல மாக  மாறிவிடும் என எதிர்பார்த்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 19 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
இந்த 19 பேரும்  சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து அரியலூர் மாவட்டதிற்கு திரும்பியயவர்கள் என்பது தெரிய வந்ததுள்ள. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை   27 ஆக உயர்ந்துள்ளது.
இதனால், கொரோனா தீவிரமடைந்த மண்டலமாக அரியலூர் சிகப்பு மண்டலமாக மாறி உள்ளது.