டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று ஒரே நாளில் 65ஆயிரத்துக்கும் மேற்பட்டோ ருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால், பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 27,66,626 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிரா, தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடக உள்பட குறிப்பிட்ட 10 மாநிலங்களில தொற்று பாதிப்பு தீவிரமாகி உள்ளது. இதை தடுக்க மத்திய மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன.
நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று (18ந்தேதி) காலை நிலவரப்படி 27,01,604 ஆக இருந்து. இன்று மேலும் அதிகரித்து மொத்த எண்ணிக்கை 27,66,626 ஆக உயர்ந்துள்ளது.
தினசரி அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பில், உலக அளவில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது..
இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போதைய நிலையில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 6லட்சத்து 76ஆயிரத்து 387 ஆக ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை 20,36,703 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 60,455 பேர் குணமடைந்து உள்ளனர். தொடர்ந்து குணமடை வோர் சதவிகிதம் அதிகரித்து வருவதாக இந்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
நேற்று ஒரே நாளில் 1099 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், இதுவரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 53ஆயிரத்து 015 ஆக அதிகரித்து உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தொற்று பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் 11,119 பேருக்கு புதிதாக தொற்றுபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 6,15,477 ஆக அதிகரித்து உள்ளது.
2வது இடத்தில் தமிழகம் உள்ளது. இங்க நேற்று 5709 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு 3,49,656 ஆக அதிகரித்து உள்ளது.
3வது இடத்தில் ஆந்திர மாநிலம் உள்ளது. இங்கு நேற்று ஒரே நாளில் 9652 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு 3,06,261 ஆக உயர்ந்துள்ளது.
4வது இடத்தில் கர்நாடக மாநிலம் உள்ளது, அங்கு நேற்று 7665 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,40,948 ஆக அதிகரித்துள்ளது.
5வது இடத்தில் உத்தரபிரதேச மாநிலமும் தொடர்ந்து வருகிறது. நேற்று மட்டும் 4218 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு 1,62,434 ஆக உயர்ந்துள்ளது.