சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,051 பேருக்கு  கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதுடன், ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்தவர்களில்  3,561 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தை பொறுத்தளவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இன்று சற்று குறைந்தே காணப்படுகிறது. மேலும், கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளது.

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு 8மணி அளவில் வெளியிட்டுள்ள தகவலின்படி, மாநிலம் முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 1051 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதன்மூலம் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  34,43,980 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 37,977 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று தொற்று பாதிப்பில் இருந்து 3,561 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்னர். இதுவரை 33,87,839 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இன்று மட்டும்  82,053  மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளது. இதுவரை  6,38,10,146 மாதிரிகள் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

தற்போது மாநிலம் முழுவதும் பேர் 18,164 ஆக குறைந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 238 பேர் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் சென்னையில் மட்டும் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  7,48,592 ஆக உயர்ந்துள்ளது.  கோயம்புத்தூர் – 157, செங்கல்பட்டு – 96, திருப்பூர் – 46, சேலம் – 39, ஈரோடு – 55 பேர் என ஆகிய மாவட்டங்களில் அதிகபட்சமாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு:

அரியலூர் 3
செங்கல்பட்டு 96
சென்னை 238
கோவை 157
கடலூர் 18
தருமபுரி 11
திண்டுக்கல் 5
ஈரோடு 55
கள்ளக்குறிச்சி 8
காஞ்சிபுரம் 33
கன்னியாகுமரி 21
கரூர் 9
கிருஷ்ணகிரி 16
மதுரை 15
மயிலாடுதுறை 1
நாகப்பட்டினம் 10
நாமக்கல் 23
நீலகிரி 24
பெரம்பலூர் 3
புதுக்கோட்டை 7
ராமநாதபுரம் 5
ராணிப்பேட்டை 6
சேலம் 39
சிவகங்கை 13
தென்காசி 6
தஞ்சாவூர் 19
தேனி 2
திருப்பத்தூர் 3
திருவள்ளூர் 41
திருவண்ணாமலை 17
திருவாரூர் 12
தூத்துக்குடி 11
திருநெல்வேலி 10
திருப்பூர் 46
திருச்சி 34
வேலூர் 8
விழுப்புரம் 14
விருதுநகர் 12