தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 18 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 94, செங்கல்பட்டில் 24 திருவள்ளூரில் 15 மற்றும் காஞ்சிபுரத்தில் 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.
கோவையில் 9 பேருக்கும் நீலகிரியில் 6 பேருக்கும் தருமபுரி, மதுரை, சேலம் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேருக்கும், கடலூர், திண்டுக்கல், ஈரோடு, பெரம்பலூர், புதுக்கோட்டை, திருவாரூர், தூத்துக்குடி, திருப்பூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
தவிர அமெரிக்கா மற்றும் கென்யா ஆகிய நாடுகளில் இருந்து வந்த தலா 1 பயணிக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்த ஒரு பயணிக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது.
இன்று மொத்தம் 14,038 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 99 ஆண்கள் 86 பெண்கள் என மொத்தம் 185 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
129 பேர் இன்று குணமடைந்த நிலையில் 1077 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.