சென்னை:  தமிழ்நாட்டில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை தலைமையக டிஐஜி மகேஷ்குமார், தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும டிஐஜியாகவும், தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும டிஐஜி ஜெயந்தி, சென்னை காவல் தொழில்நுட்ப பிரிவு டிஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்

தமிழகம் முழுவதும் 18 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில்,  3 பேருக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி, தமிழ்நாடு காகித ஆலை முதன்மை கண்காணிப்பு அதிகாரி டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் பேகர்லா செபாஸ் கல்யாண், சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் சரக டிஐஜி திஷா மிட்டல், சென்னை மேற்கு மண்டல இணை ஆணையராகவும் நியமிக்கப்படுகின்றனர்.

சேலம் சரக டிஐஜி உமா, விழுப்புரம் சரக டிஐஜியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு குற்ற ஆவண காப்பக எஸ்.பி. நாகஜோதி, தமிழ்நாடு சீருடை பணியாளார் தேர்வாணைய எஸ்.பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை தலைமையக எஸ்.பி அமனத் மன், சென்னை சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணையத்தின் துணை ஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாகை எஸ்.பி மாற்றம் சென்னை பயிற்சி பள்ளி எஸ்.பி லாவண்யா, சென்னை குற்ற ஆவண காப்பக எஸ்.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

, சேலம் தலைமையக துணை ஆணையர் கீதா, சென்னை பெருநகர காவல் தலைமையக துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை நகர் மேற்கு துணை ஆணையர் கீதா, சேலம் தலைமைய துணை ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் நகர் தெற்கு துணை ஆணையர் வேல் முருகன், சென்னை தாம்பரம் மத்திய குற்ற பிரிவு துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை தாம்பரம் மத்திய குற்ற பிரிவு துணை ஆணையர் பிரபாகர், சென்னை சைபர் கிரைம் எஸ்.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நாகப்பட்டினம் எஸ்.பி.அருண் கபிலன், சென்னை தலைமையக துணை ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

குடிமை பொருள் வழங்கல் துறை மதுரை மண்டல எஸ்.பி செல்வகுமார், நாகப்பட்டிணம் எஸ்.பி.யாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தேனி ஏஎஸ்பி கேல்கர் சுப்ரமண்யா, பதவி உயர்வு பெற்று சேலம் நகர் தெற்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

குளச்சல் ஏஎஸ்பி கம்பம் சாமுவேல் பிரவீன் கவுதம், பதவி உயர்வு பெற்று திருப்பூர் நகர் வடக்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

, நாங்குநேரி ஏஎஸ்பி பிரசன்னா குமார், பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி நகர் மேற்கு துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.