18 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் மற்றும் ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஆகியவற்றை தொடர்ந்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் ஏற்கனவே மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக அருண் அந்தப் பொறுப்பில் நேற்று நியமிக்கப்பட்டார்.
ஏடிஜிபி அருண் கூடுதலாக கவனித்து வந்த சென்னை சிஐடி அமலாக்கப்பிரிவை ஏடிஜிபி அமலராஜ் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தாம்பரம் காவல் ஆணையராக இருக்கும் அமராஜுக்கு பதிலாக அபின் தினேஷ் மோடக் தாம்பரம் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கள்ளகுறிச்சி சம்பவத்தை அடுத்து காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட அம்மாவட்ட எஸ்.பி. மகேஷ் குமார் அகர்வால் ஆயுதப்படை ஏடிஜிபி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
டிஜிபி மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலசோனை நடத்திய நிலையில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளின் அதிரடி இடமாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.