சென்னை: தமிர்நாட்டில் தற்போது விசாயிகளுக்கு 18 மணி நேரம் மின்சாரம் வழங்கப்படுகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
தமிழக மின்துறை தொடர்பான வெளியான தகவல்களைத் தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசை கடுமையாக சாடி அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும் விவசாயிகளுக்கு 24மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில், செய்தியளார்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘திமுக ஆட்சியில்தான் 18 மணி நேரம் விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.
மேலும், ஒரு குடியிருப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு இருந்தால், அதை ஒன்றாக மாற்ற வேண்டும் என்ற சுற்றறிக்கையை அனுப்பவில்லை. அதிகாரி ஒருவர், அவராக சுற்றறிக்கையை அனுப்பி இருந்த நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யபட்டார் என்று கூறினார்.
தமிழ்நாட்டில் இன்னும் 67,000 பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கவில்லை என்று கூறியவர், எத்தனை மின் இணைப்பு வைத்திருந்தாலும். 100 யூனிட் மின்சாரம் இலவசம் தொடரும் என்றார்.
கடந்த அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு 9 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது 18 மணி நேரம் முன்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என்றவர், 24மணி நேரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியவர், மின்சார விநியோகங்களில் பழைய நிலையே நீடிக்கும். கோடை காலத்தில் அதிகமாக தேவைப்படும் மின்சாரத்திற்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் “ என்று கூறினார்.